Home » சினிமா » விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’

விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’

விக்ரம் நடிப்பில் ராஜ்கமல் பிலிம் இண்டர்நெஷனல், டிரடண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்து வரும் படத்திற்கு ‘கடாரம் கொண்டான்’ என பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தை ராஜேஷ் ம.செல்வா கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்க ஸ்ரீனிவாஸ் ஆர்.குத்தா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். விக்ரமுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷ்ரா ஹாசன் நடிக்கிறார். ‘டோன் ப்ரீத்’ என்ற ஆங்கில படத்தின் ரீமேக்காக எடுக்கப்படும் இந்த படம் மலேசியாவில் நடைபெறும் கதை என்பதால் ‘கடாரம் கொண்டான்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மலேசியாவுக்கு கடாரம் என்ற தமிழ் பெயரும் உண்டு. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் மலேசியாவை பிடித்ததால் அவருக்கு கடாரம் கொண்டான் என பட்டப்பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*