Home » விளையாட்டு » ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி நியூசி. வீரர் பவுல்ட் சாதனை

‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி நியூசி. வீரர் பவுல்ட் சாதனை

அபுதாபி, நவ.8: பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தின் வேக பந்துவீச்சாளர் டிரென்ட் பவுல்ட், ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் உள்ள ஷெயிக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது. ராஸ் டெய்லர் (80 ரன்), டாம் லாதம் (68 ரன்) அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள், நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறினர்.

27 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தபோது, பஹார் ஜமான் (1 ரன்), பாபர் அசாம் (0), முகமது ஹபீஸ் (0) ஆகியோரை, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் அடுத்தடுத்த பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார்.

இதன்மூலம், ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை பவுல்ட் நிகழ்த்தியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*