Home » விளையாட்டு » ஏடிபி பைனல்ஸ்: நடால் விலகல்

ஏடிபி பைனல்ஸ்: நடால் விலகல்

லண்டன், நவ. 8: உலக தரவரிசையில் டாப்-8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்த 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், தற்போது இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*