w
Home » சினிமா » சர்கார் விமர்சனம்

சர்கார் விமர்சனம்

அமெரிக்காவில் உள்ள ஜிஎல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் ராமசாமி (விஜய்). இங்கு நடைபெறும் பொதுத்தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக தமிழகம் வருகிறார்.

ஏர்போர்ட்டில் இருந்து நேராக வாக்குச்சாவடி செல்கிறார். அங்கு வரிசையில் நின்று ஓட்டுப்போட சென்ற போது ஏற்கனவே அவருடைய ஓட்டை யாரோ கள்ள ஓட்டாக போட்டு விடுகின்றனர். இதனால் அதிர்ச்சியடையும் விஜய் தன்னுடைய ஓட்டு உரிமையை பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுகிறார். இதனால் ஆளும் கட்சியின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார். உயர் பதவியை விட்டு விட்டு தேர்தலில் குதிக்கிறார். இந்த தேர்தலில் அவர் எப்படி வெற்றி பெற்றார்? அரசியல் வாதிகளை எவ்வாறு சமாளித்தார் என்பதே படத்தின் மீதி கதை.

முழுக்க முழுக்க அரசியல் படத்தில் ஆவேச வசனங்களுடன் அனல் பறக்க பேசி நடித்திருக்கிறார் விஜய். ஒவ்வொரு படத்திலும் அதிக கவனம் செலுத்தும் விஜய் இந்த படத்திலும் வேறுவித பரிமாணத்தில் நடித்துள்ளார். லேசான தாடி, காதில் கடுக்கன் என திரையில் அழகாக தெரிகிறார் விஜய். சண்டை காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தனக்கே உரிய ஸ்டைலில் மாஸ் காட்டி உள்ளார். கதாநாயகியாக நடித்துள்ள கீர்த்தி சுரேசுக்கு சொல்லிக் கொள்ளும் அளிவிற்கு கதாபாத்திரம் இல்லை.

விஜய்யுடன் வந்து செல்கிறார். வில்லியாக நடித்துள்ள வரலட்சுமி அரசியல் சாணக்கிய தனத்துடன் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் தமிழகத்தின் முக்கிய பெண் அரசியல் புள்ளியை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பழ.கருப்பையா, ராதாரவி ஆகிய இருவரும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

கதை, திரைக்கதைக்கு முக்கியதுவம் கொடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தில் வருண் ராஜேந்திரனின் மூலக்கதைக்கு சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகளையே திரைக்கதையாக அமைத்து படத்தை எடுத்துள்ளார். குடும்பத்துடன் தீக்குளிப்பு, 2 கண்டெய்னர் லாரியில் பணம், ஸ்லோ பாயிசன், விவசாயிகள் தற்கொலை என பல தமிழக பிரச்சனைகளை திரைக்கதையில் கொண்டு வந்துள்ளார். வாக்குப்பதிவின் போது மதியம் 2 மணி வரை 52 சதவீதம் எதிர்கட்சிக்கும், 2 சதவீதம் விஜயிக்கும் கிடைத்த நிலையில் மீதமுள்ள 3 மணி நேரத்தில் விஜய் தரப்பு வெற்றி பெற்றதாக அறிவித்தது நம்பும்படியாக இல்லை.

பதவியேற்பு விழாவின் போது கவர்னருக்கு போனில் தகவல் சொல்வது, தனிமனிதனாக மிகப்பெரிய அரசியல் புள்ளியை எதிர்ப்பது, 1800 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டு கட்சி அலுவலகம் நடத்த இடமின்றி பொதுமக்களின் குடியிருப்பில் ஆபீஸ் நடத்துவது என பல இடங்களில் லாஜிக்
மிஸ்சிங்.

ஜெயமோகனின் வசனங்கள் தெறிக்கும்படியாக இல்லை. மேலும் சமூக வலைதளங்களில் வரும் ஃபார்வேர்டு மெசேஜ்கள் படத்தில் வசனங்களாக உள்ளன. தன்னை மீனவர் என சொல்லிக்கொள்ளும் விஜய்க்கு அது பற்றிய அழுத்தமான காட்சிகள் எதுவும் சொல்லப்படவில்லை. இப்படி வசனங்களிலும், காட்சி அமைப்புகளிலும் முருகதாஸ் கோட்டை விட்டுள்ளார்.

முழுக்க முழுக்க ஆளும் கட்சியை அட்டாக் செய்தே படம் எடுக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் தாளம்போட வைக்கிறது. பின்னணி இசை பெரிய அளவில் பேசப்படவில்லை. கிரீஸ் கங்காதரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது. சண்டை காட்சிகளிலும், நடன காட்சிகளிலும் கேமரா விளையாடி உள்ளது. மொத்தத்தில் சர்கார் அரசியல் மசாலா

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*