Home » விளையாட்டு » விண்டீஸ் கிரிக்கெட் அணி சென்னை வந்தது

விண்டீஸ் கிரிக்கெட் அணி சென்னை வந்தது

சென்னை, நவ.8:  இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள கடைசி டி-20 போட்டியில் பங்கேற்பதற்காக வெ.இண்டீஸ் கிரிக்கெட் அணியினர் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

இந்தியா – வெ.இண்டீசுக்கு எதிரான கடைசி (3-வது) டி-20 போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.
சிதம்பரம் ஸ்டேடியத்தில் நவம்பர் 11-ம் தேதி இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நவம்பர் 4-ம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில், இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியினர் நேற்றிரவு சென்னை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளதால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேசமயம், இன்று அல்லது நாளைக்குள் இந்திய அணியினரும் ஒவ்வொரு பிரிவாக சென்னை வந்தடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் நடக்கும் போட்டி என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*