Home » இந்தியா » இறங்குமுகத்தில் பெட்ரோல்-டீசல் விலை

இறங்குமுகத்தில் பெட்ரோல்-டீசல் விலை

சென்னை, நவ.8:  பெட்ரோல்-டீசல் விலை 3-வது வாரமாக இறங்குமுகத்தில்உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து 81 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோன்று, டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகள் குறைந்து 77 ரூபாய் 05 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*