Home » Flash News » குழந்தையின் வாயில் பட்டாசு வெடித்த கொடூரன்

குழந்தையின் வாயில் பட்டாசு வெடித்த கொடூரன்

மீரட், நவ.8:உத்தரபிரதேச மாநிலத்தில் குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த கொடூரனை போலீஸ் தேடி வருகிறது.

மீரட் மாவட்டம் மில்லக் கிராமத்தில் சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அப்போது சசிகுமார் என்பவரின் 3 வயது மகள், வாய், தொண்டை பகுதி சிதைந்த நிலையில் வீட்டு வாசல் அருகே கிடந்ததை பெற்றோர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அந்த சிறுமி கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அவளுக்கு வாய் மற்றும் தொண்டைக்குழி பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் வாயில், அதே பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசை வைத்து வெடிக்க செய்தது தெரியவந்ததையடுத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறை வான ஹர்பாலை போலீசார் தேடி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*