Home » Flash News » முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு?

முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு?

A.R. Murugadoss

சென்னை, நவ.8:சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேவராஜ் என்பவர் அளித்துள்ள புகாரில் தமிழக அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் சர்கார் படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் மக்களுக்கு வழங்கிய இலவச மிக்சி கிரைண்டர் உள்ளிட்டவற்றை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சர்கார் படத்தில் இடம்பெறும் காட்சிகள் இலவசங்களை பெற்ற மக்களை இழிவுபடுத்தும் வகையிலும், அரசாங்கத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*