Home » Flash News » சர்கார் பட சர்ச்சை: அரசு நடவடிக்கை பாயுமா?

சர்கார் பட சர்ச்சை: அரசு நடவடிக்கை பாயுமா?

சென்னை, நவ.8:தமிழக அரசை கடுமையாக விமர்சித்து எடுக்கப்பட்டுள்ள சர்கார் திரைப்படத்தை இயக்கிய முருகதாஸ், அதில் நடித்த விஜய், தயாரித்த சன் பிக்சர்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தி உள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அதிமுக அரசை தாக்கி பல்வேறு காட்சிகள் சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அதிமுக அமைச்சர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய இந்த காட்சிகளை நீக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இது பற்றி கலந்தாலோசித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

சர்க்கார் திரைப்படம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கிடையே சர்கார் திரைப்படத்திற்கு எதிராக கமிஷனர் அலுவலகத்தில் செம்பியத்தை சேர்ந்த தேவராஜன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார். தமிழக அரசின் இலச்சினை பொறிக்கப்பட்ட இலவச பொருட்களை எரிப்பது போல படத்தில் காட்சி இடம் பெற்றிருப்பதாகவும், இது தமிழக அரசை அவமதிக்கும் செயல் என்றும் அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*