Home » Flash News » நடிகர்கள் மீது டி.ஜெயக்குமார் தாக்கு

நடிகர்கள் மீது டி.ஜெயக்குமார் தாக்கு

சென்னை, நவ.8:ஜெயலலிதா இல்லாததால் நடிகர் களுக்கு குளிர்விட்டு போய்விட்டதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் வீரமாமுனிவர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

சர்கார் திரைப்படம் கொள்கை லட்சியங்களை கொண்டதாக இருக்கலாம். ஆனால் அது ஒருவித வன்மத்துடன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சர்கார் திரைப்படக்குழு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா இருக்கும்போது இந்த படத்தை எடுத்திருந்தால் அவர்களது வீரத்தை பாராட்டியிருப்போம். அவர் இல்லாததால் திரைப்படம் எடுப்பவர் களுக்கும் நடிகர்களுக்கும் குளிர்விட்டு போய்
இருக்கிறது.

நடிகர்கள் எல்லோரும் முதலமைச்ச ராக விருப்பப்படுகிறார்கள். அவர்கள் என்னதான் முயற்சி எடுத்தாலும் எம்ஜிஆர் போல ஆக முடியாது.

தகுதி நீக்க எம்எல்ஏக்கள் சசிகலா உள்பட உலகில் உள்ள எல்லா தலைவர்களை சந்தித்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலைஇல்லை.
அதிமுகவும் அமமுகவையும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தனியரசு எம்எல்ஏ தெரிவித்து இருப்பது கானல் நீராகத்தான் முடியும். அதற்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*