Home » Flash News » பெங்களூர் சிறைக்கு திரும்பினார் இளவரசி

பெங்களூர் சிறைக்கு திரும்பினார் இளவரசி

சென்னை, நவ.8:கடந்த மாதம் 25-ம் தேதி பரோலில் வந்த இளவரசிக்கு, இன்று பரோல் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை பெங்களூர் சிறைக்கு செல்லவுள்ளார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல் கிடைத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை கைதிகளுக்கான அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சசிகலா மட்டும் ஒரு முறை கணவர் நடராஜன் இறந்ததற்காக பரோலில் சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்டனை கைதி இளவரசியிடம், சகோதரர் உடல்நிலை சரியில்லாமல் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரை பார்ப்பதற்கு வரும்படியும் உறவினர் ஒருவர் சிறையில் இளவரசியை சந்தித்து தகவல் தெரிவித்துள்ளார். அதை ஏற்ற இளவரசி தனது வக்கீல் மூலம் பரோல் மனுவை சிறைத்துறை எஸ்.பி சோமசேகரிடம் கடந்த மாதம் 25-ம் தேதி அளித்தார். இதை தொடர்ந்து இளவரசிக்கு, கர்நாடக சிறைத்துறை 15 நாள் பரோல் வழங்கியதை தொடர்ந்து அன்று மாலையே இளவரசி பரோலில் வந்தார்.

சென்னை திரும்பிய இளவரசி அவரது மகன் விவேக் ஜெயராமின் நுங்கம்பாக்கம் இல்லத்தில் தங்கியிருந்தார். இந்த 15 நாட்களில் வீட்டை விட்டு வெளியே வராத இளவரசியை அங்கு சென்று அவரது உறவினர்கள் பலர் சந்தித்தாக தெரிகிறது. தினகரனிடம் பல விஷயங்கள் குறித்து இளவரசி ஆலோசிக்க சசிகலா அறிவுறுத்தயிருந்த நிலையில், தினகரன் இளவரசியை வந்து சந்தித்து பேசாமல் தவிர்த்தார்.

15 பரோல் முடிந்து இன்று மாலை சிறைக்கு திரும்ப வேண்டும் என பெங்களூர் சிறைதுறை உத்தரவிட்டுள்ள நிலையில், காலை பெங்களூருக்கு இளவரசி புறப்பட்டார். இன்று மாலை 6 மணிக்கு முன்பாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்லவுள்ளார்.

பரோலில் இருந்த 15 நாட்களில் இளவரசி பல்வேறு யாகங்களையும், பூஜைகளையும் நடத்தினர் என தெரிகிறது. யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடத்துவதற்காக பல்வேறு கோயில்களை சேர்ந்த அர்ச்சகர்கள் நாள்தோறும் இளவரசி தங்கியிருந்து நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு படையெடுத்தை காணமுடிந்தது

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*