Home » Flash News » ‘சர்கார்’ படத்துக்கு அமைச்சர்கள் கண்டனம்

‘சர்கார்’ படத்துக்கு அமைச்சர்கள் கண்டனம்

சென்னை, நவ.8:விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில், ஜெயலலிதாவை விம்ர்சிப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளை நீக்கா விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர்.

செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டியில், ‘சர்கார்’ படத்தைத் தயாரித்தவர்கள், அரசியல் உள்நோக்கத்தோடு, வன்மத்தோடும் சில காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

வளர்ந்துவரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளை அவர்களாக நீக்கிவிட்டால் நல்லது. இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோ
சிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியிருப்பதாவது: சர்கார் திரைப்பட விமர்சனத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்.சர்கார் திரைப்படத்தில் இலவசங்கள் தேவையில்லை என்று விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை வெளியிட்டுள்ள நிறுவனம் அரசுக்கு எதிராகவே படம் தயாரிக்கும்.

இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்று மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் அனைத்தும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே அளிக்கப்படுகிறது. இன்றைய மக்களின் மனநிலை ஆளும் அரசுக்கு ஆதரவாகவே இருக்கிறது. சர்கார் படத்தில் எப்படி காட்சிகள் வந்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

‘சர்கார்’ திரைப்படத்தில் அரசின் நலத் திட்டங்களுக்கு எதிரான விமர்சனம், வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது. குறிப்பாக அரசின் இலவசப் பொருள்களை எரிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. இது அரசை அவமதிக்கும் செயலாகும்.

எனவே, திரைப்படத்தின் தயாரிப்பாளர், திரையரங்குகள் மீது வழக்கு தொடர்வது ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*