Home » Flash News » சசிகலா குடும்பத்தில் மோதல்

சசிகலா குடும்பத்தில் மோதல்

சென்னை, நவ.5:பெங்களூர் சிறையிலிருந்து வெளியே வந்த இளவரசியின் பரோல் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ளது. பரோலில் வந்துள்ள இளவரசியை இதுவரை டிடிவி தினகரன் சந்தித்து பேசாதது அவரது குடும்பத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது குடும்ப உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூருவில் இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இளவரசி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அந்த உறுதி விண்ணப்பத்தில், அவரது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை நேரில் சென்று கவனித்துக் கொள்ள வேண்டி, கர்நாடக சிறையிலிருந்து செல்ல பரோல் மனு தக்கல் செய்வதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்தச் சூழ்நிலையில், இளவரசிக்கு 15 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை, ரத்த உறவுகளின் உடல்நிலை ஆகியவற்றை காரணம் காட்டி, பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற விதி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் இளவரசிக்கு பரோல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நவம்பர் 8-ம் தேதி மாலை 6மணிக்கு சிறைக்கு திரும்ப வேண்டும் என பெங்களூர் சிறை நிர்வாக தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் தொடர்பாகவும், செய்தியாளர்களை சந்திக்க கூடாது என நினைப்பந்தனையுடன் இளவர
சிக்கு பரோல் வழங்கப்பட்டது.

பரோலில் கடந்த மாதம் 25-ம் தேதி சென்னை வந்த இளவரசி அவரது மகன் விவேக் ஜெயராமனின் நுங்கம்பாக்கம் இல்லத்தில் தங்கியுள்ளார். சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள இளவரசிக்கு கட்சி ரீதியாகவும், குடும்ப சொத்துகள் தொடர்பாக சில அறிவுரை கூறி தினகரனை அழைத்து பேச அறிவுறுத்தியிருந்தாக தெரிகிறது. இளவரசி பரோலில் வந்து இன்றுடன் 1 வாரம் கடந்த நிலையில் டிடிவி தினகரன் இதுவரை சந்தித்து பேசவில்லை.

இளவரசி பரோலில் வந்த நாளன்று மதுரை சென்ற டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியதோடு, அதற்கு மறுநாள் மருதுபாண்டியர் விழாவில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை சென்றார்.

அதைத் தொடர்ந்து கரூரில் அமமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் அக்டோபர் 30-ந் தேதி பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு 31-ந் தேதி சென்னை திரும்பிய நிலையில் இதுவரை இளவரசியை சென்று சந்திக்கவில்லை.

தினகரனுடன் பேச வருமாறு பலமுறை இளவரசி தரப்பில் முற்பட்டபோதும் அதற்கு தினகரன் செவிசாய்க்கவில்லை என தெரிகிறது. தினகரன், இளவரசி சந்திப்பை தவிர்த்து வரும்நிலையில் இது அவரது குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயாடிவி, நமது அம்மா நிர்வாகம் தொடர்பாக சில பிரச்னைகளை தீர்க்க முடியாமல் இளவரசி திணறி வருகிறார். மேலும் ஆளும்தரப்புடன் சமரசம் ஏற்படுவது குறித்து சசிகலா இளவரசிடம் சில தகவல்கள் தெரிவித்தாகவும், அதனை தினகரனை சமாதானப்படுத்த இளவரசி மேற்கொண்ட முயற்சி தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

வரும் 8-ம் தேதியுடன் இளவரசிக்கு பரோல் முடியவுள்ள நிலையில், இன்னும் உள்ள 3 தினங்களில் தினகரன் சந்தித்து சசிகலா கூறி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த இளவரசி தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
ன்

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*