Home » குற்றம் » தீபாவளி பண்டு நஷ்டம்: கொரட்டூரில் தாய்-மகன் தூக்கிட்டு தற்கொலை

தீபாவளி பண்டு நஷ்டம்: கொரட்டூரில் தாய்-மகன் தூக்கிட்டு தற்கொலை

அம்பத்தூர், நவ.3: ஷேர் மற்றும் தீபாவளி பண்ட் கட்டி நஷ்டமடைந்ததால் மனமுடைந்த வாலிபர் தாயுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர்கள் செல்லமாக வளர்த்த நாய்க்கும் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொரட்டூர் வாஞ்சிநாதன் நகர்,7வது தெருவைச்சேர்ந்தவர் ஜான்.இவரது மனைவி அமலா (வயது61). இவர்களது மகன் ஜோஷ்வா (வயது 29). ஜான் எழும்பூரில்உ ள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். குடும்ப பிரச்சனை காரணமாக ஜான் பிரிந்து வாழ்ந்து வருவதால் அமலாவும் மகன் ஜோஷ்வாவும் தனியாக வசித்து வந்தனர். ஜோஷ்வா ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

ஜோஷ்வா ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்வது வழக்கம். அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு ரூ. 15 லட்சம் வரை கடன் வாங்கி பணம் முதலீடு செய்துள்ளாராம். மேலும் 200க்கும் மேற்பட்டவர்களிடம் தீபாவளி பண்டு பணம் வசூலித்துள்ளார்.அவர்களுக்கு தீபாவளிக்கு பணம் கொடுக்க வேண்டும்.

இந்தநிலையில் ஷேர் மார்க்கெட்டில் போட்ட பணம் நஷ்டம் அடைந்ததால் மனமுடைந்து காணப்பட்டாராம். பண்டு கட்டியவர்களும், பணம் கொடுத்தவர்களும் தினமும் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதில் மனமுடைந்த ஜோஷ்வா தாயிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார்.

மேலும் நான் உன்னை தனியாக விட்டுசெல்லமாட்டேன் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம்எ ன்று கூறியுள்ளார். மகன் அவமானப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத தாய் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றிரவு வீட்டில் வளர்த்த நாய்க்கு விஷம் கொடுத்துள்ளனர். பின்னர் தாய் , மகன் இருவரும் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இன்று காலை வெகுநேரமாகியம் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அருகில் உள்ளவர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்த போது தாய் மகன் இருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அவர்கள் கொடுத்த புகார் தொடர்பாக கொரட்டூர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளேசென்று தூக்கில் தொங்கிய தாய் -மகனை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அந்த வீட்டில் கிடைத்த கடிதத்தில் ஜோஷ்வா எழுதிவைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்து.

இதில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த பணம் நஷ்டம் அடைந்ததால் தீபாவளி பண்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுக்கமுடியவில்லை மன்னித்து விடுங்கள். என் தாயை தனியாக விட்டு செல்ல முடியாததால் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்றும் நாங்கள் செல்லமாக வளர்த்த நாயையும் அழைத்துச்செல்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப் பட்டிருந்ததை போலீசார் கைப்பற்றினர். ஆனால் நாய் மாயமாகி இருந்ததால் அவற்றை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் கொரட்டூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*