Home » சினிமா » சர்கார்:தியேட்டர்களுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

சர்கார்:தியேட்டர்களுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

மதுரை, நவ.2: மதுரையில் சர்கார் படம் வெளியிடப்படும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அந்த தியேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்து
உள்ளது.  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த படத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.  இந்நிலையில் உசிலம்பட்டியை
சேர்ந்த மகேந்திர பாண்டி என்பவர் உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்த தாவது:

நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு விஜய் நடித்த  சர்கார் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் மதுரையில் 5க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகிறது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. ஆன்லைனில் ஒரு டிக்கெட் ரூபாய் 500 முதல் 1000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1000 ரூபாய் வரை கூடுதலாக கட்டணம் வசூலிப்பது விதிமீறல். டிக்கெட் 16.10.2017 ஆம் ஆண்டு உள்துறை (சினிமா) வெளியிடப்பட்ட அர சாணையில் கட்டணங்கள் குறித்து வரைமுறைப்படுத்தப்
பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கபட வேண்டும் எனவும், மற்ற திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 100 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும், ஏசி திரையரங்குகளுக்கு குறைந்தபட்சம் 80 ரூபாய் என்றும் அரசாணையில் உள்ளது. ஆனால் அரசாணையை பின்பற்றாமல் பலமடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மதுரையில் உள்ள தனியார் அமைப்புகள் மூலம் சர்கார் படத்தின் ஒரு டிக்கெட் ரூபாய் 1000 வரை விற்கப்படுகிறது. இந்த சினிமா டிக்கெட் கட்டணம் ஜிஎஸ்டி வரம்பிற்குள் வருகிறது. இதுபோன்ற கூடுதல் கட்டணம் வசூல் செய்வதால் ஜிஎஸ்டி வருவாய் குறைய வாய்ப்புள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாக உள்ள திரையரங்குகளில், அர சாணைப்படி கட்டணம் வசூலிக்க உரிய உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் மனுதாரர் தெரிவித்து இருந்தார். இந்த மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு  விசாரணைக்கு வந்தது. சர்கார் படத்தை வெளியிடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மதுரையில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் திரையரங்கின் உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*