Home » சினிமா » அப்பா, மகன் கதை ‘ராஜாவுக்கு ராஜா’

அப்பா, மகன் கதை ‘ராஜாவுக்கு ராஜா’

சந்தோஷமோ! வேதனையோ! கஷ்டமோ அனைத்தையும் ஜாலியாக கடந்துப்போகும் அப்பா, மகன் பற்றிய கதை தான் ‘ராஜாவுக்கு ராஜா’.

சின்ன சின்ன தவறுகளால் அப்பாவும், மகனும் அடிக்கடி போலீஸிடம் சிக்கி தண்டனை பெறுவார்கள். மகன போலீஸ்ல சேர்த்து விட்ட போலீஸ் நம்மள ஒன்னும் பண்ண மாட்டாங்க என யோசித்து, தன் செல்வாக்கை பயன்படுத்தி விருப்பமில்லாத மகனை போலீஸ் வேலையில் சேர்த்து விடுகிறார். பேலீஸாக தைரியமில்லாத ஹீரோ ஒரு சந்தர்ப்பத்தில் வில்லியிடம் மாட்டிக்கொள்கிறார்.

அந்த வில்லியிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆக்ஷன் மற்றும் காதல் கலந்து திரைக்கதை அமைத்து அறிமுக இயக்குனர் ஏ.வசந்த்குமார் இயக்கி உள்ளார்.

ஜாலியான அப்பாவாக மகாநதி சங்கர், மகனாக வி.ஆர்.வினாயக், வில்லியாக அங்காடி தெரு சிந்து நடிக்க கதாநாயகிகளாக தியா, வைஷ்ணவி மற்றும் மனோபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.காசி விஷ்வா ஒளிப்பதிவு செய்ய, ஜெயக்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மேட்டுப்பாளையும், ஊட்டி, தேனி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*