Home » சினிமா » விருதுகள் பெற்ற தொரட்டி திரைப்படம்

விருதுகள் பெற்ற தொரட்டி திரைப்படம்

1980களில் ராமநாதபுர மாவட்டத்தின் கிராமங்களில் வாழ்ந்த கீதாரிகளின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தொரட்டி தமிழ் திரைப்படத்தை ஷமன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்காக அந்த பகுதியில் 3 மாதங்களுக்கு மேல் தங்கியிருந்து அப்பகுதி மக்களுடன் இரண்டர கலந்து படத்தில் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்கள்.

அமிர்தசரஸில் நடைபெற்ற பி.ஜி.எப்.எப். சர்வதேச திரைப்பட விழாவில் நடந்த திரையிடல் முடிவில் திரையில் அதிகம் காட்டப்படாத ராமநாதபுரத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, காதலை, உறவுகளின் உணர்வுகளை, கருவறுக்கும் கோபத்தை இயல்பாகவும் உயிரோட்டத்தோடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனைவரும் எழந்து நின்று கைதட்டி பாராட்டி சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை தொரட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த குமா ஸ்ரீதருக்கு அளித்தனர்.

செக்கோஸ்லோவேகியாவில் நடந்த பிரக்கியூ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது தொரட்டி படத்தின் கதையின்நாயகனான நடித்த ஷமன் மித்ரூவுக்கு வழங்கபட்டது.இப்படத்தினை திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் வாங்கி வெளியிடுகிறார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*