Home » விளையாட்டு » சானியா குழந்தைக்கு குடியுரிமை வழங்குவதில் சிக்கல்

சானியா குழந்தைக்கு குடியுரிமை வழங்குவதில் சிக்கல்

ஐதராபாத், நவ.1: விளையாட்டு நட்சத்திரங்கள் சானியா-ஷோயப் தம்பதியினரின் குழந்தை இஷான் மிர்சா-மாலிக்கிற்கு பாகிஸ்தான் நாட்டு குடியுரிமை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, கிரிக்கெட் ஸ்டார் ஷோயப் மாலிக் தம்பதியினருக்கு கடந்த இருதினங்களுக்குமுன் ஐதராபாத்தின் ரெயின்போ மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இஷான் மிர்சா-மாலிக் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த நிலையில், தாய் தந்தையர் இருவரும் இருவேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் குழந்தை இஷானுக்கு குடியுரிமை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து உருது செய்தி ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது: இரட்டைக் குடியுரிமை உடன்படிக்கைகளை பாகிஸ்தான் 19 நாடுகளுடன் கொண்டுள்ளது,

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுடன் அத்தகைய உடன்படிக்கை இல்லை. ஆகவே, சானியா-ஷோயிப் தம்பதியின் குழந்தைக்கு பாகிஸ்தான் குடியுரிமை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*