Home » சினிமா » ரஜினியுடன் கமல் நடிக்காதது ஏன்?:ஷங்கர்

ரஜினியுடன் கமல் நடிக்காதது ஏன்?:ஷங்கர்

சென்னை, நவ.1:2.0 படத்தில் ரஜினியுடன் இணைந்து வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடிக்காதது ஏன் என இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஸ்டார் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘2.0’ படத்தின் சிஜி வேலைகள் உலகின் பல்வேறு நாடுகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வரும் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது.

இந்நிலையில் படம் பற்றி ஷங்கர் கூறியதாவது:-

2.0 படம் பட்ஜெட், பிரம்மாண்டம் ஆகியவற்றை தாண்டி அதில் உள்ள ஆத்மார்த்தமான கதையை எதிர்பார்த்து தியேட்டருக்கு வாங்க. அடுத்து, எங்க உழைப்பின் வீரியத்தை உணர வேண்டுமென்றால், படத்தை 3டி திரையரங்குகளில் பார்க்க வேண்டும் என்றார்.எந்திரன் முடிஞ்சதுமே அதோட பார்ட்-2 பண்ணணும்னு பலர் விரும்பினர்கள். ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாம இருந்த சமயத்தில் பட வேலைகளைத் தள்ளிவைத்தோம்.

‘சிட்டி’ கதாபாத்திரம் திரும்பி வர்றதே அவருக்குப் பெரிய பரவசம். ஸ்கிரிப்ட்டும் வித்தியாசமாக இருந்ததால் அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ‘3டி-யில் பண்றோம்’ என்பது அவரின் எதிர்பார்ப்பைக் கூட்டியது. ஹாலிவுட் ஸ்டார் அர்னால்டை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நினைத்தோம்.

ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு கமலை நடிக்க வைக்கலாம் என தோன்றியது. ஒரே படத்தில் ரஜினி, கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது என் ஆசை.

ஜெயமோகன்தான் இந்தப் படத்துக்கு வசனம். அவரும் நானும் கமலிடம் பேசினோம். நேரிலும் சந்தித்தோம். ஆனால், கமல் ‘இந்தியன் 2’ பண்ணுவதில் ஆர்வமா இருந்தார். அந்த வாய்ப்பும் மாறி விட்டது. அதன் பின்னர்தான் அக்ஷய் குமார் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*