Home » ஆசிரியர் பரிந்துரை » வதந்தியை தடுக்க வாட்ஸ் அப்-க்கு வலியுறுத்தல்

வதந்தியை தடுக்க வாட்ஸ் அப்-க்கு வலியுறுத்தல்

புதுடெல்லி,நவ.1:வாட்ஸ் அப் வழியாக வதந்திகள் பரப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும். அந்த நிறுவனத்தை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

சமீபகாலமாக வாட்ஸ் அப் வழியாக பரப்பபடும் வதந்திகளால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்தியாவில், அண்மையில் வாட்ஸ் அப் வதந்திகளால், கும்பல் தாக்குதல் நடைபெற்று அப்பாவிகள் பலர் பலியாகினர்.

இதையடுத்து, வாட்ஸ் அப் மூலம், தவறான தகவல்கள், நாடு முழுவதும் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் நிர்வாகத்துடன், மத்திய அரசு, பல கட்டமாக பேசியது. இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து,இந்தியா வந்துள்ள, வாட்ஸ்அப் நிறுவனத்தின் துணை தலைவர், கிறிஸ் டேனி யல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிர
சாத்தை சந்தித்தார்.

வதந்திகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அவரிடம் வலியுறுத்தினார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*