Home » உலகம் » விமான விபத்தில் குழந்தை உயிருடன் மீட்பா?

விமான விபத்தில் குழந்தை உயிருடன் மீட்பா?

ஜகர்த்தா, அக். 31:189 பேருடன் கடலில் விழுந்த விமானத்தில் இருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டதாக சமூக வலைதளங் களில் குழந்தையின் புகைப்படம் ஒன்று வேகமாக பரவி வருகிறது.

இந்தோனேசியா தலைவர் ஜகர்த்தா வில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு 189 பேருடன் சென்ற விமானம் 2 நாட்களுக்கு முன் நடுக்கடலில் விழுந்தது. லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் இருந்தவர்கள் 3 பேர் குழந்தைகள். இதில் பச்சிளம் குழந்தைகள் 2.சுமத்ரா தீவு பகுதியில் விமானத்தின் பாகங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டு சேகரிக்கப்பட்டு வருகிறது. உடல் பாகங்கள் 124 பைகளில் சேகரிக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனைக்காக மருத்துவமனை களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

115 அடி ஆழத்தில் முக்கிய பாகங்கள் கிடைக்கக்கூடும் என்பதால் ராணுவ வீரர்கள், மீனவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 3 சிறப்பு கப்பல் களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் ஒரு கைக்குழந்தை யின் புகைப்படம் நேற்று முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அந்த குழந்தை விமான விபத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தகவல் பரப்பப் பட்டு வருகிறது.

விமானம் கடலில் விழுவதற்கு முன் அந்த குழந்தையின் தாய் குழந்தைக்கு உயிர் காக்கும் உடையை அணிவித்து விட்டதாகவும், தண்ணீரில் மிதந்த குழந்தை மீட்கப்பட்டுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

குழந்தையின் தாய் உயிரிழந்து விட்டதாகவும், அந்த குழந்தைக்காக அனைவரும் பிரார்த்திப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த தகவல் உண்மை யல்ல என்றும், இந்த குழந்தை விமான விபத்தில் இருந்து மீட்கப்பட்டது அல்ல என்றும், ஜூலை மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் இருந்து மீட்கப்பட்டது என்றும் இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.எனினும் குழந்தையின் புகைப் படம் வெளியான ஒருசில மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக் கானோர் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*