Home » Flash News » அமெரிக்காவில் இந்திய தம்பதி பலி

அமெரிக்காவில் இந்திய தம்பதி பலி

வாஷிங்டன், அக்.31:அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், மலை முகட்டில் நின்று செல்பி எடுத்த இந்திய தம்பதி தவறி விழுந்து உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் செங்கனூரைச் சேர்ந்த விஷ்ணு-மீனாட்சி ஆகி யோர் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.இருவரும் செல்பி பிரியர்கள் என்பதால் வித்தியாசமான படங்களை எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள யோசமிட்டி தேசியப் பூங்காவிற்கு சென்ற இருவரும் டாஃப்ட் பாயிண்ட் என்ற இடத்தில் செல்பி எடுத்தபோது, 800 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்து இருவரும் உயிரிழந்தனர்.

பூங்காவின் முக்கிய பகுதிகளை டாஃப்ட் பாயிண்டில் இருந்து பார்க்க முடியும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அங்கு புகைப்படம் எடுப்பது வழக்கம். செல்பி மோகத்தால் இளம் தம்பதி பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*