w
Home » விளையாட்டு » புரோ கபடி: பெங்களூரு, யுபி அணி வெற்றி

புரோ கபடி: பெங்களூரு, யுபி அணி வெற்றி

புனே, அக். 25: 12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில், பெங்களூரு அணி 42-34 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம், நடப்பு சீசனில் பெங்களூரு அணி தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. மற்றொரு லீக் ஆட்டத்தில் யுபி யோதா மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. இதில் யுபி யோதா அணி 29-23 என்ற கணக்கில் புனேவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம், யுபி யோதா அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*