Home » Flash News » ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டு உண்மையே: வெற்றிவேல் கூறுகிறார்

ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டு உண்மையே: வெற்றிவேல் கூறுகிறார்

சென்னை, அக்.23:  ஜெயக்குமார் மீதான குற்றச்சாட்டு உண்மையானதுதான் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

‘ஜெயக்குமார் யார் என்று வடசென்னையே சொல்லும். தவறு செய்யவில்லை என்றால் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்பட ஜெயக்குமார் ஒத்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் எனது பாதுகாப்பில் இல்லை. என்னிடம் மேலும் பல வீடியோ, ஆடியோ ஆதாரம் இருக்கிறது. அதை சரியான நேரத்தில் வெளியிடுவேன்.
ஜெயக்குமார் குரல் என்னது இல்லை என்று சொன்னாரே தவிர குழந்தை எனது இல்லை என்று சொல்லவில்லை. ஒரு பெண் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று நான் சொல்வது தப்பா? ஒருவேளை அந்த பெண்ணுக்கு யாரோ ஒருவர் சொல்லி கொடுத்துதான் பேச வைக்கப்பட்டது என்றால் அதை நீங்களே ஆராயுங்கள். யாராவது 10 நிமிஷத்துக்கு மிமிக்ரி செய்வார்களா? அந்த குழந்தை பிறந்ததும், அது சம்பந்தமான பிறப்பு சான்றிதழை மருத்துவமனை அளித்ததும் உண்மையே. அந்த பிறப்பு சான்றிதழை அழிக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் அது முடியவில்லை.

எனவே பாதிக்கப்பட்ட பெண்ணையும், அமைச்சர் ஜெயக்குமாரையும் அழைத்து சென்று ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். இது அதிமுகவுக்கே ஒரு இழுக்கு. ஜெயலலிதா பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார். அவர் மறைவுக்குப் பின் இப்படியான சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இவர் மட்டுமல்ல இன்னும் சில அமைச்சர்கள் மீது இத்தகைய புகார் இருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நேரத்தில் திண்டுக்கல்லில் ஒரு ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து இது நடத்தப்பட்டுள்ளது. என்னிடம் ஆதாரம் இருக்கிறது.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

ஒருவேளை அந்த பெண்ணுக்கோ, அவரது குடும்பத்துக்கோ ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் ஆதாரங்களை வெளியிடுவேன். போராட்டம் கூட நடத்துவேன்.
எனவே ஜெயக்குமார் பாலியல் புகாரில் சிக்கியிருப்பதால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஆடியோ விவகாரத்தில் ஜெயக்குமார் மீது ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயக்குமார் போல வேறு சில அமைச்சர்களும் இருக்கிறார்கள். அவர்களும் திருந்த வேண்டும்‘

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*