Home » Flash News » 18 எம்எல்ஏக்கள் வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு?

18 எம்எல்ஏக்கள் வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு?

சென்னை, அக்.22: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017, செப்டம்பர் 18-ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர்.

தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், 18 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தலாம் என்றும் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.

அதே சமயம், 18 எம்.எல்.ஏ.க் களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் தனது மாறுபட்ட தீர்ப்பை கடந்த ஜூன் 14-ஆம் தேதி வழங்கினர்.மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து ஜூலை 23-ஆம் தேதி முதல் மூன்றாவது நீதிபதி எம்.சத்யநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 24-ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நிச்சயமாக எங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்று தங்க. தமிழ்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*