Home » Flash News » பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் கைது

பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டர் கைது

காஞ்சிபுரம், அக்.22:மேல்மருவத்தூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் திருப்பேர்பாண்டி பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் ஒரு விவசாயி இவரது மனைவி சத்யா இவரும் விவசாயம் செய்து வருகிறார். இவர்களது மகள் ரூபாவதி(வயது 13). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8 வகுப்பு படித்து வருகிறார். மேலும் அதேபகுதியை சேர்ந்தவர் நாகதாஸ் இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த ரூபாவதியை நாகதாஸ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்த ரூபாவதி கதறி அழுதுள்ளார். உடனே இதுகுறித்து அவரது தாய் சத்யா மேல்மருவத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் அந்த புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்த போலீசார் நாகதாஸை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*