Home » Flash News » வெற்றிமாறன் மீது கமிஷனரிடம் புகார்

வெற்றிமாறன் மீது கமிஷனரிடம் புகார்

சென்னை, அக்.22:தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 18-ந் தேதி வெளியான படம் வடசென்னை.இந்த படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் மற்றும் வடசென்னை மக்களை காட்டியுள்ள விதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பலதரப்பினர் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் இயக்குனர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எல்.கே.சார்லஜ் அலெக்சாண்டர் இன்று காலை கமிஷனர் அலுவலகத்தில் இயக்குனர் வெற்றி மாறன் மீது புகார் அளித்துள்ளார். பொது இடங்களில் கெட்ட வார்த்தைகள் பேசக்கூடாது என்ற சட்டத்தை மீறி வடசென்னை படம் முழுவதும் கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*