Home » Flash News » ஆம்னி பஸ் தீப்பிடித்து 4 பேர் கருகி சாவு

ஆம்னி பஸ் தீப்பிடித்து 4 பேர் கருகி சாவு

விழுப்புரம், அக்.19:உளுந்தூர்பேட்டை அருகே சொகுசு பேருந்து மீது லாரி மோதியதில் லாரி மற்றும் பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதில் 4 பேர் உடல் கருகி பலியாகினர். பேருந்தில் இருந்த 3 பேரும் லாரியில் இருந்த ஒருவரும் உயிரிழந்தனர். ஜன்னல் வழியாக பயணிகள் வெளியே குதித்து உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து மதுரை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ப்யணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது. அந்த பேருந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை சென்றுக்கொண்டிருந்த போது எடைக்கல் காவல்நிலையம் அருகே சிமெண்ட் கலவை கலக்கும் லாரி ஒன்று வளைவில் வளையும் போது எதிர்பாராத விதமாக பேருந்தின் பின் பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டீசல் டேங்கில் உரசியதால் பேருந்து மற்றும் லாரி தீப்பற்றி எரிந்தது. சற்று நேரத்தில் தீ மளமளவென பரவியது.உடனடியாக தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை, மங்கலம்பேட்டை உள்ளிட்ட 5 தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ அடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர்.

அந்த பேரூந்தில் ஒட்டுநர் உட்பட மொத்தம் 26 பேர் வந்துள்ளனர். அதில் பேருந்தில் வந்த 3 பேரும் , லாரியில் இருந்த ஒருவரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
தீ அணைக்கப்பட்டு மற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதில் சிலர்க்கு லேசான காயம். அனைவரும் உளுந்தூர்பேட்டை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பேரூந்து எரிந்த உடனே அவரசர வழி மற்றும் சன்னல்களை உடைத்து கீழே குதித்து பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று போக்குவரத்து பாதிப்பை சரி செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகிறார். இறந்த வர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உடல் முழுவதும் கருகியதால் இறந்தவர்களின் விபரங்கள் தெரியவில்லை. சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது.தொடர்ந்து அடையாளம் காண காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்

விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் வருமாறு:
1. மோனிஷா (25) அருப்பு கோட்டை விருதுநகர் மாவட்டம்
2. அலெக்சாண்டர் அலங்காநல்லூர், மதுரை
3 சக்திவேல் 58 பராசக்தி நகர் மதுரை
4. அடையாளம் தெரியாத நபர்
காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. பேருந்து பயணிகள் ஜன்னல்கள் வழியாக வெளியாக குதித்திருக்காவிட்டால் உயிர்சேதம் அதிக அளவில் இருந்து இருக்கும்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*