Home » Flash News » சென்னையில் திடீர் மழை: பொது மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் திடீர் மழை: பொது மக்கள் மகிழ்ச்சி

சென்னை, அக்.17:சென்னை நகரில் இன்று பல்வேறு இடங்களில் திடீரென பலத்த மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெப்பம் நிலவி வந்த நிலையில், இந்த மழையால் குளிர்ச்சி நிலவியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 1 மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஓடியது. இதனால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது மழையோ அல்லது பலத்த மழையோ பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*