Home » Flash News » ஆன்லைன் கேம்:குடும்பத்தாரை கொன்ற இளைஞன் கைது

ஆன்லைன் கேம்:குடும்பத்தாரை கொன்ற இளைஞன் கைது

புதுடெல்லி, அக்.12: பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி போன மாணவன் ஒருவன், தனது பெற்றோர்களை கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்தியா முழுக்க பப்ஜி விளையாட்டு மிக பிரபலம். ராணுவ தாக்குதல் போல இருக்கும் இந்த விளையாட்டு கூட்டம் கூட்டமாகவோ இல்லை தனியாகவோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் எதிராளி மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தும்படி வடிமைக்கப்பட்டு இருக்கும் ஆன்லைன் விளையாட்டு ஆகும். இதற்கு தற்போது தமிழக இளைஞர்கள் அதிக அளவில் அடிமை ஆகியுள்ளனர். இந்த நிலையில் இந்த விளையாட்டு காரணமாக பெரிய கொலை சம்பவம் ஒன்று டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் சுராஜ், இந்த விளையாட்டிற்கு அடிமையாகி தனது தந்தை மிதிலேஷ், தாயார் சியா மற்றும் தங்கையை கொலை செய்துள்ளான். கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் இந்த கொலைகளை செய்துள்ளான். இவனை டெல்லி போலீசார் கைது செய்தள்ளனர்.
கொலையை மறைக்க, வீட்டில் திருட வந்தவர்கள் கொன்றது போல நாடகம் ஆடிய அவன் போலீஸ் நடத்திய விசாரணையை உண்மையை ஒப்புக்கொண்டான்.

இவன் கடந்த சில மாதங்களாக அந்த ஆன்லைன் கேமான பப்ஜி கேமிற்கு அடிமையாகி, வீட்டிலிருந்து பணத்தை திருடி நண்பர்களுடன் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி வீட்டில் சண்டை போடுவான் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீல திமிங்கல விளையாட்டு அதை ஆடியவர்களை தற்கொலைக்கு தூண்டுவதுபோல இந்த பப்ஜி விளையாட்டு கொலை செய்ய தூண்டும் என கூறப்படுகிறது.
சுடுவது, கொல்வது என்று முழுக்க முழுக்க வன்முறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பப்ஜி விளையாட்டின் காரணமாகவே இவனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*