Home » Flash News » ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

ரூ.70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை, அக்.12:சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற பயணி கடத்தி எடுத்துச்சென்ற ரூ. 70 லட்சம் மதிப்புள்ள ஹவாலா பணத்தை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சிவகங்கையைச்சேர்ந்த வாலிபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சென்னையில் இருந்து இன்று காலை சிங்கப்பூர்செல்லும் தனியார் விமானத்தில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அந்த தகவலின் படி இன்று காலை அதிகாரிகள் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் தனியார் விமான பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு வாலிபரிடம் விசாரணை நடத்தி அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர் கொண்டு வந்திருந்த சூட்கேசில் கார்பன் பேப்பரில் மறைத்து பண்டல் இருந்தது தெரியவந்தது.அவற்றை பிரித்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. உடனடியாக அந்த பணத்தை பறிமுதல் செய்த பார்த்த போது வெளிநாட்டு பணம் என்பது தெரியவந்தது.

போலீசார் அவரை தனியாக அழைத்து சென்ற விசாரணை நடத்தியபோது அவர் சிவகங்கை மாவட்டத்தைச்சேர்ந்த செந்தில் அரசு (வயது 34) என்பதும் இவர் சுற்றுலா விசாவில் ஹாங்காங் செல்வதும் தெரியவந்தது.

அவரை கைது செய்த அதிகாரிகள் மேலும் நடத்திய விசாரணையில் இந்த பணம் கிடைத்தது எப்படி என்றும் ஹாவாலா வழக்கில் தொடர்புடையவரா என்றும் இது பல்வேறு கோணங்களில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ. 70 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதேபோன்று கடந்த 7ம் தேதி சென்னை விமான நிலைத்தில் ரூ. 77லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*