Home » Flash News » நிர்மலா தேவியுடன் எந்த தொடர்பும் இல்லை:கவர்னர் மாளிகை

நிர்மலா தேவியுடன் எந்த தொடர்பும் இல்லை:கவர்னர் மாளிகை

சென்னை, அக்.12:நிர்மலா தேவி விவகாரத்தில் துளியும் தொடர்பில்லை என்று கவர்னர் மாளிகை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உண்மையை ஆராயாமல் மஞ்சள் பத்திரிகை போல நக்கீரன் செய்தி வெளியிட்டதற்கு கவர்னர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.கவர்னர் மாளிகை வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கவர்னர் மற்றும் கவர்னர் மாளிகையுடன் நிர்மலா தேவி என்ற அருப்புக்கோட்டையை சேர்ந்த உதவி பேராசிரியரை தொடர்பு படுத்தி முற்றிலும் உண்மைக்கு மாறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

நிர்மலா தேவி போலீசில் தெரிவித்ததாக கூறப்படும் வாக்குமூலமே தவறானதாகும். இதை வைத்து மாநிலத்தின் முதல் குடிமகன் மீது கோழைத்தனமாகவும், ஆபாசமாகவும், களங்கம் சுமத்தும் வகையிலும் செய்திகள் பரப்பப்படும் நிலையில் பொறுமைக்கும் எல்லை உண்டு என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது.
இந்த விவகாரம் எழும்பிய பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கவர்னர் மாளிகை கண்ணியமான முறையில் மௌனம் காத்து வந்தது. மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் இது பற்றி எந்த கருத்தையும் கவர்னர் மாளிகை தெரிவிக்கவில்லை.

ஆனால், மஞ்சள் பத்திரிகை போல நக்கீரன் இதழில் செப்டம்பர் மாதம் அதிர்ச்சி தரத்தக்க ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், அனைத்து விசாரணை முடிவடைந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. புலனாய்வு இதழியல் என்று கூறிக் கொள்பவர்கள் நிர்மலா தேவி போலீசிடம் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலம் சரியானதா என்பது பற்றி கவலைப்படவில்லை.

கோழைத்தனமாகவும், உண்மையை சரிபார்க்கும் வகையிலும் இந்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. உண்மை என்னவெனில் நிர்மலா தேவி கடந்த ஓராண்டில் கவர்னர் மாளிகைக்குள் நுழைந்ததே இல்லை. கவர்னரையோ அல்லது அவரது செயலரையோ, அல்லது கவர்னர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகளையோ அவர் சந்தித்தது இல்லை.

அன்னை தெரசா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு சென்ற போது பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் கவர்னர் தங்கியதே இல்லை. மேலும் கவர்னருடன் அவரது செயலர் வரவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*