Home » Flash News » ஸ்டாலின், டிடிவியுடன் கருணாஸ் சந்திப்பு

ஸ்டாலின், டிடிவியுடன் கருணாஸ் சந்திப்பு

சென்னை,அக். 12:தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் 20 நிமிட நேரம் மு.க.ஸ்டாலினுடன் அவர் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்குலத்தோர் புலிப்படை தலைவரான கருணாஸ் எம்.எல்.ஏ. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், அ.தி.மு.க. அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.இந்த நிலையில் கடந்த வாரம் அவரை போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கோர்ட்டில் ஜாமீன் பெற்று கருணாஸ் சிறையில் இருந்து வெளியே வந்தார்.அவரை வேறொரு வழக்கில் கைது செய்வதற்காக நெல்லை போலீசார் சென்னைக்கு வந்து முகாமிட்டு அவரது வீடு தேடி சென்றனர்.

ஆனால் இதை முன்கூட்டியே அறிந்த கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து விட்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்யாமல் திரும்பி விட்டனர்.

கருணாசை தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து பேசி வந்தனர்.தற்போது உடல் நலம் சரியாகிவிட்டதால் ஆஸ்பத்திரியில் இருந்து கருணாஸ் “டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விட்டார்.

இன்று காலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கோபாலபுரம் வீட்டுக்கு சென்று கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் 20 நிமிட நேரம் மு.க.ஸ்டாலினுடன் அவர் பேசிக்கொண்டிருந்தார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*