Home » சென்னை » எம்ஜிஆர் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்க

எம்ஜிஆர் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்க

சென்னை, அக்.11: எம்ஜிஆருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அப்போலோ மருத்துவமனையிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகங்கள் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்திடம் இதுவரை 100க்கும் அதிகமானோர் சாட்சியங்கள் அளித்துள்ளனர்.

ஜெயலலிதாவை வெளிநாட்டில் சிகிச்சை பெற அனுப்பாதது ஏன் என்பது குறித்தும் ஆணையம் மருத் துவர்களிடம் விசாரித்துள்ளது.

சென்னையிலேயே நல்ல சிகிச்சை அளிக்கப்படுவதால் ஜெயலலிதாவே வெளிநாட்டில் சிகிச்சை பெற விரும்பவில்லை என மருத்துவர்கள் சாட்சியத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் 1984-ல் அக்டோபர் முதல் நவம்பர் வரை எம்ஜிஆருக்கு அப்போலோ மருத்துவமனை யில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரத்தை தாக்கல் செய்யுமாறு ஆறுமுகசாமி ஆணையம் கேட்டிருப் பதாக அந்த வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆணையத்திடம் இருந்து தங்களுக்கு அக்டோபர் 4-ந் தேதி கடிதம் வந்திருப்பதை அப்போலோ மருத்துவமனையின் சட்ட ஆலோசகர் மைமுனா பாட்சா உறுதிப்படுத்தி உள்ளார்.

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு எம்ஜிஆருக்கு அமெரிக்க மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றிய முழு விவரங்களை அக்டோபர் 23-ந் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு விசாரணை ஆணையம் கேட்டிருப்பதாக தெரிகிறது.

1984-ல் நியூயார்க்கில் உள்ள புருக்ளின் மருத்துவமனையில் எம்ஜிஆருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது. இதன் பிறகு அவர் நாடு திரும்பினார். பின்னர் உடல்நலக் குறைவால் 1987-ல் மரணம் அடைந்தார்.ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரத்தை விசாரித்து வரும் ஆணையம் எம்ஜிஆரின் மருத்துவ அறிக்கையை கேட்டிருப்பது வியப்பை அளிப்பதாக சில வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

மேலும் எம்ஜிஆருக்கு வெளி நாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதாவுக்கு அந்த வசதியை அளிக்காதது ஏன் என்பதற்கான காரணத்தை ஆணையம் அறிந்து கொள்ள விரும்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*