Home » குற்றம் » எண்ணூரில் ரவுடி படுகொலை: 10 பேரிடம் விசாரணை

எண்ணூரில் ரவுடி படுகொலை: 10 பேரிடம் விசாரணை

சென்னை, அக்.11: எண்ணூரில் ரவுடி பிரபு கொலை செய்யப்பட்டது தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

எண்ணூர் சுனாமி குடியிருப்பு ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் பிரபு என்கிற கிளி பிரபு (வயது 35). இவர், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை போன்ற பகுதிகளில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக, திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய காவல்நிலையங்களில் இவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், எண்ணூர் ரெயில்வே நிலையம் அருகே தண்டவாளத்தில் இருந்து பிரபு நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவலறிந்ததும் ரெயில்வே போலீசார் சடலத்தை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.

மது போதையில் ஏற்பட்ட தகராறில் நண்பர்களே, பிரபுவை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக, 10 பேரை பிடித்து ரிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*