Home » விளையாட்டு » ஆசிய பாரா: புதிய உச்சத்தில் இந்தியா

ஆசிய பாரா: புதிய உச்சத்தில் இந்தியா

ஜகர்தா, அக். 11: 3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது.

இதில் 5-வது நாளான நேற்று நடந்த வில்வித்தை போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் ரிகர்வ் இறுதிசுற்றில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் 6-0 என்ற கணக்கில் ஜாவ் லிஸ்னேவை (சீனா) சாய்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

இதன்மூலம், இந்தியாவுக்கு 7-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீரர் மோனு சாங்காஸ் 35.89 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும், நீளம் தாண்டுதல், டேபிள் டென்னிஸ், செஸ், குண்டு எறிதல், பளுதூக்குதல் ஆகிய போட்டிகளிலும் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை இந்திய வீரர், வீராங்கனைகள் அள்ளிக்குவித்தனர்.

அதன்படி, இந்தியா இதுவரை 7 தங்கம், 14 வெள்ளி, 19 வெண்கலம் என்று மொத்தம் 40 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. ஆசிய பாரா விளையாட்டு போட்டி வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்க எண்ணிக்கை இதுவாகும். இதன்மூலம், ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்தியா புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*