Home » விளையாட்டு » இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட்: மழையால் ரத்து

இங்கிலாந்து – இலங்கை கிரிக்கெட்: மழையால் ரத்து

தம்புலா, அக். 11:  இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

அதன்படி, தம்புலாவில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டி மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தபோது, திடீரென மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஜோ ரூட் மற்றும் கேப்டன் மோர்கன் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

பின்னர், நீண்ட நேரமாகியும் மழை நிற்காத காரணத்தால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் (அக்., 13) இதே ஆடுகளத்தில் நடைபெற உள்ளது, குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*