Home » விளையாட்டு » விண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு

விண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு

ஐதராபாத், அக். 11: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனையடுத்து, 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்கிறது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி கவுகாத்தியில் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் ஐதராபாத்தில் இன்று கூடி ஆலோசிக்க உள்ளனர். கேப்டன் விராட் கோலியும் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். சமீபகாலமாக விக்கெட் கீப்பர் தோனி, பேட்டிங் ஃபார்ம் இன்றி இருப்பதால், அவரை நீக்கிவிட்டு, அவருக்கு மாற்றாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்டுக்கு வாய்ப்பளிப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.

அதே சமயம் டோனியை கழற்றி விடாமல், ஒரு பேட்ஸ்மேனாக ரிஷாப் பான்ட் இடம் பெறும் வகையில் ஆலோசனை நடத்தப்படவும் வாய்ப்புள்ளது. அடுத்துவரும் கடினமான ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் பொருட்டு, இந்த தொடரில் இருந்து கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்படலாம். மிடில் ஆர்டரை பொறுத்தமட்டில் அம்பதி ராயுடுவிற்கு இடம் உண்டு.

தொடைப்பகுதியில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் கேதார் ஜாதவ் அணியில் இடம்பிடிப்பது டவுட்தான். ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராக கண்டிப்பாக அணியில் இருப்பார். டெஸ்ட் தொடரில் ஓய்வளிக்கப்பட்ட புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகிய இருவரும் ஒருநாள் தொடரில் அணிக்கு திரும்புவர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*