Home » தமிழ்நாடு » மினி லாரி கவிழ்ந்து 5 பேர் பலி

மினி லாரி கவிழ்ந்து 5 பேர் பலி

கோவை, அக்.11:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்து 5 பேர் உயிரிழந்தனர்.

குறுமலை காட்டுப்பட்டி மலை வாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 18 பேர் கோட்டூர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு மினி லாரியில் வால்பாறை வழியாக திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

காடம்பாறை அருகே வந்தபோது மினி லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோரம் இருந்த தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 5 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 12 பேர் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் லாரியை ஓட்டிச் சென்ற ராஜனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லையென்பது தெரியவந்தது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*