Home » Flash News » தேர்தல் கமிஷனிடம் சசிகலா மனு

தேர்தல் கமிஷனிடம் சசிகலா மனு

புதுடெல்லி, அக்.11:அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து ஏற்படுத்தப் பட்ட புதிய விதிகள் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரி தேர்தல் ஆணையத்திடம் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார்.

கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதை யடுத்து, கட்சியின் பொதுக்குழு கூடி பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்தது.

கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை நியமிக்க பொதுக் குழுவில் கட்சியின் சட்ட, திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மேற்கொண்ட திருத்தத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*