Home » Flash News » ப.சிதம்பரம் சொத்துக்கள் முடக்கம்

ப.சிதம்பரம் சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி, அக்.11:ஐஎன்எஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

இருவரின் ரூ.90 லட்சம் வங்கி கணக்கும் முடக்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் உள்ள ஜோபாத் பார்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, கொடைக்கானல் மற்றும் ஊட்டியில் உள்ள பங்களா, இங்கிலாந்தில் உள்ள பங்களா மற்றும் ஸ்பெயினில் பார்சிலோனாவில் உள்ள டென்னிஸ் கிளப் ஆகியவற்றுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

2006-2007-ல் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது ஐஎன்எஸ் மீடியா என்ற ஊடக நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடிக்கு முதலீடுகளை பெற்றது. இதற்கு நிதி அமைச்சகத்தின் அனுமதியை பெற சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தியதாக புகார் கூறப்பட்டது.

இதற்காக அவர் ரூ.10 லட்சம் கமிஷன் பெற்றதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் நடைபெற்ற நிதி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. கார்த்தி சிதம்பரம் கடந்த மார்ச் 1-ந் தேதி லண்டனில் இருந்து திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் சிறையில் 23 நாட்கள் காவலில் இருந்த அவர் மார்ச் 23-ந் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனிடையே சிதம்பரம் மீதான புகார் குறித்து அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இது தொடர்பாக தன்னை கைது செய்வார்கள் என அஞ்சி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதில் ஒவ்வொரு முறையும் அவரை கைது செய்ய தடை விதிக்கப்பட்டு வந்தது. கடைசியாக அக்டோபர் 25-ந் தேதி வரை இந்த தடையை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை அமலாக்கத்துறை சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான சொத்துக்களை முடக்கி இருக்கிறது.

டெல்லியில் அப்பார்ட்மெண்ட், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் உள்ள பங்களாக்கள், இங்கிலாந்து மற்றும் பார்சிலானாவில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.54 கோடி இருக்கும். இது தவிர இருவரின் ரூ.90 லட்சம் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கிறது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*