Home » தமிழ்நாடு » ஆற்றில் குளித்த பட்டதாரி பெண்  பலி

ஆற்றில் குளித்த பட்டதாரி பெண்  பலி

சிதம்பரம், அக். 10;சிதம்பரம் அருகே ஒரத்தூரில் ஆற்றில் குளிக்கச் சென்ற எம்.பி எல் பட்டக்டிப்பு மாணவி தண்ணீரில் மூழ்கி பலியானார்.

சிதம்பரம் காசு கடைத் தெருவில் வசிப்பவர் சத்யபிரியா (வயது 24) இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.பி எல்பட்டப் படிப்பு படித்து வந்தார். இவர் ஒரத்தூர்பகுதியில் தன்னுடன் படித்து வரும் தோழி தவச்செல்வி வீட்டுக்கு தனது தோழிகளுடன் சென்றார் .அப்பொழுது வீட்டின் அருகில் இருந்த ஆற்றில் குளிக்க தன்னுடைய தோழிகளுடன் சத்யப்ரியா சென்றார் . அப்பொழுது தோழிகள் தாங்கள் குளிக்கவில்லை நாங்கள் கரையில் நிற்கிறோம் என்று கூறிவிட்டு மற்ற தோழிகள் கரையில் நின்றனர்.

அப்போது சத்யபிரியா மட்டும் ஆற்றில் இறங்கி குளித்தபோது மிக ஆழமான பகுதியில் உள்ள சேற்றில் மூழ்கினார்.இதை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து ஆற்றில் மூழ்கிய சத்தியப் பிரியாவை இறந்த நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்பு இச்சம்பவம் பற்றி தகவலறிந்த ஒரத்தூர் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*