Home » சினிமா » நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’

நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தன்னுடைய அடுத்த படமான ‘ஐரா‘வில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ‘அறம்‘ படத்தை தயாரித்த கொட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை சர்ஜூன் கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

இவர் ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்‘ படத்தை இயக்கியவர். ப்ரியங்கா ரவீந்திரன் திரைக்கதை அமைக்க, கே எஸ் சுந்தர மூர்த்தி இசை அமைக்கரார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ஜோகேஷ் படக்தொகுப்பு மேற்கொள்கிறார். இதில் கலை அரசன், யோகி பாபு, ஜே பி ஆகியோர் நடித்து உள்ளனர்.

இது குறித்து தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே ராஜேஷ் கூறுகையில் நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரை உலக அந்தஸ்து ‘ஐரா‘ படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் இல்லை. சர்ஜூன் கதை சொன்ன மாத்திரத்தில் இந்த கதை நயன்தாராவுக்கு மிகவும் சவாலான, அதே சமயம் ரசிகர்களை மிகவும் கவரும் கதை என புரிந்தது.

இதுவரை நடித்திராத இரட்டை வேடங்களில் நயன்தாரா இந்த படத்தில் நடிக்கிறார். ‘ஐரா‘ என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஒரு ஹரார் படமாகும் என்றார்.

 

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*