Home » சினிமா » விஜயதசமி அன்று விஜயின் சர்கார் டீசர்

விஜயதசமி அன்று விஜயின் சர்கார் டீசர்

சென்னை, அக்.10: விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி விஜயதசமியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் தொடங்கி உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய் ஊழலுக்கு எதிராகவும், தமிழக அமைச்சர்களுக்கு எதிராகவும் கடுமையாக தாக்கி பேசினார்.

மேலும் நான் முதல்வரானால் முதலமைச்சராக நடிக்க மாட்டேன் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலும் கூடியது. படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், படத்தின் டீசர் வரும் 19-ம் தேதி விஜயதசமி அன்று வெளியாகும் என தயாரிப்பு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் போட்டி போடுகின்றனர். சென்னை உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கி உள்ளார். அதேபோல் மதுரை உரிமையை ரூ.10.5 கோடிக்கும், கன்னட உரிமை ரூ.8 கோடிக்கும் விற்பனையாகி உள்ளது. தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*