Home » Flash News » குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை முயற்சி

குழந்தையை கொலை செய்து தாய் தற்கொலை முயற்சி

மதுரை, அக்.10:கணவன் சென்னையில் பணியாற்றி வருவதால் தாய் வீட்டில் வசித்து வந்த பெண் விரக்தியில் 3 வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அடுத்த கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்.இவரது மனைவி முத்துமாரி.இவர்களுக்கு 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இருவரும் என்ஜினியர்கள்.இவர்களுக்கு 3 வயதில் விசாகா என்ற பெண் குழந்தை இருந்தது.

செந்தில்குமார் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். தனியாக இருக்க முடியாத முத்துமாரி குழந்தையுடன் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென்று முத்துமாரி குழந்தையுடன் காணமால் போனாராம். உடனடியாக அவரது தாய் எழுந்து தேடி பார்த்துள்ளார். பின்னர் வீட்டின் மாடிக்கு சென்ற பார்த்து போது குழந்தை கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகவும் பக்கத்தில் கையில் கத்தியுடன் விஷம்அருந்தி உயிருக்குபோராடினாராம்.

இதைபார்த்த அவரது பெற்றோர் அலறி துடித்தனர். அவரகளது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி சென்று பார்த்த விடடு உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விஷம் அருந்தி.உயிருக்கு போராடிய முத்துமாரியை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கணவரை பிரிந்து வாழ்ந்ததால் விரக்தி அடைந்த முத்துமாரி சில நாட்களாக மனநலம் பாதித்தவர் போன்று பேசி வந்துள்ளதும் அவரது பெற்றோர் அவரை மனநல மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் மனநலம் பாதிக்கப்பட்டதால் தனது குழந்தையை கொலை செய்தாரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்று பல்வேறு கோணத்தில் வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தாய் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் மதுரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*