Home » Flash News » தேர்தல் கமிஷனில் சி.வி.சண்முகம் கோரிக்கை

தேர்தல் கமிஷனில் சி.வி.சண்முகம் கோரிக்கை

சென்னை, அக். 10:அதிமுக விதிகளில் மாற்றம் செய்ததை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் கே.சி.பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் இரு அணிகளாக செயல்பட்ட இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் கடந்த ஆண்டு இணைந்தன. இதையடுத்து நடை பெற்ற பொதுக்குழுவில் பொதுச்
செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங் கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

கட்சியின் சட்ட விதிகளில் செய்யப் பட்ட இந்த மாற்றத்தை ஏற்கக்கூடாது எனக்கோரி கே.சி.பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிராகரிக்க கோரி இன்று சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு எடுத்த முடிவுக்கு எதிராக மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால் கே.சி.பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக் கியதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த வழக்கில் நேற்றுடன் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தரப்பு விவாதம் நிறைவடைந்தது. இதையடுத்து அடுத்த விசாரணை அக்டோபர் 23-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*