Home » Flash News » திமுக எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது

திமுக எம்எல்ஏ உள்பட 300 பேர் கைது

சென்னை, அக்.10:வண்ணாரப்பேட்டையில் அதிமுக அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் விநியோகம் செய்த திமுக எம்எல்ஏ மாதவரம் சுதர்சனம், புலவர் இந்திரகுமாரி உள்ளிட்ட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடசென்னை மாவட்ட திமுக சார்பில் அதிமுக அரசு மீதான ஊழல் புகார்களை துண்டுபிரசுரமாக விநியோகிக்கும் நிகழ்ச்சி இன்று வண்ணாரப்பேட்டை மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது.
வடக்கு மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் இலக்கிய அணி செயலாளர் புலவர் இந்திர குமாரி இதை துவக்கி வைத்தார்.

இதையடுத்து திமுகவினர் கடை, கடையாகவும், வீதி வீதியாகவும் துண்டுபிரசுரங்களை விநியோகிக்க தொடங்கினர். தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை போலீசார் விரைந்து வந்து துண்டுபிரசுரம் விநியோகிப்பதற்கு முன் அனுமதி பெறவில்லை எனக் கூறி சுதர்சனம் எம்எல்ஏ , புலவர் இந்திரகுமாரி, வட சென்னைஇலக்கிய அணி செயலாளர் ரெயின்போ விஜயகுமார், பகுதி செயலாளர்கள் ஜெபராஜ்பாண்டியன், சுந்தர்ராஜன், முன்னாள் நிர்வாகிகள் ஏ.வி.மணி, முருதுகணேஷ் உள்ளிட்ட சுமார் 300 பேரை கைது செய்தனர். கைதான அனைவரும் வடசென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டனர்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*