Home » Flash News » காசி விஸ்வநாதரை தரிசித்த ரஜினிகாந்த்

காசி விஸ்வநாதரை தரிசித்த ரஜினிகாந்த்

சென்னை, அக்.10: வாரணாசியில் நடைபெற்று வரும் பேட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷýட்டிங் முதலில் டார்ஜிலிங், அடுத்து டேராடூன், அதன்பிறகு லக்னோ என நடைபெற்று முடிந்தது. இப்போது வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ரஜினி பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். நெற்றியில் பட்டை, பெரிய மீசையுடன் வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த ரஜினி ஒரு சில வட இந்திய மீடியாக்களுக்கு பேட்டி அளித்து விட்டு புறப்பட்டு
சென்றார். முன்னதாக புனித நதியான கங்கையில் காலை நனைத்துவிட்டு தரிசனத்திற்கு ரஜினி சென்றார்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*