Home » விளையாட்டு » பிரித்வி ஷாவுக்கு எதிர்காலம் உள்ளது: சச்சின் கணிப்பு

பிரித்வி ஷாவுக்கு எதிர்காலம் உள்ளது: சச்சின் கணிப்பு

மும்பை, அக்.7: அறிமுக டெஸ்ட் ஆட்டத்தில் சதமடித்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்ற பிரித்வி ஷா நீண்ட நாட்களுக்கு இந்திய அணியில் நிலைப்பார் என்று சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

18 வயதே ஆன பிரித்வி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடி 154 பந்துகளில் 134 ரன்களை குவித்தார். மேலும் முதல் டெஸ்டிலேயே சதமடித்த இளம் வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

இந்நிலையில் பிரித்வி ஷா ஆட்டம் குறித்து சச்சின் கூறியதாவது:- பிரித்வி தன் வசம் அபரிதமான ஆட்டத்திறனை தன்னுள் கொண்டுள்ளார். அவருக்கு எதிர்காலம் மிகவும் சிறப்பாக அமையும். முதல் ஆட்டத்திலேயே பெரிய ஸ்கோரை அவர் எடுத்திருப்பது திருப்தி அளிக்கிறது.

உள்ளூரில் சிறப்பாக ஆடிய ஒருவர் அதே போல் சர்வதேச அளவில் முத்திரை பதிப்பாரா என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையில் சிந்தனை செய்வர். பிரித்வியை பொறுத்தவரை முதல் தடையை அவர் தாண்டி விட்டார். அணியில் தனது இடத்தை உறுதி செய்து விட்டார்.

மேலும் வேகமாக கற்று வருகிறார். வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர் ஆட்டத்திறமையை பின்பற்றுவார் என்றார் சச்சின்.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*