Home » விளையாட்டு » மலேசியாவை வீழ்த்திய இந்தியா

மலேசியாவை வீழ்த்திய இந்தியா

ஜோகர் பாரு, அக்.7: மலேசியாவில் நேற்று தொடங்கிய சுல்தான் ஆஃப் ஜோகர் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டித் தொடரில் இந்தியா, மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கிரேட் பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் போட்டியில் பிரிட்டன் நியூசிலாந்தை தோற்கடித்தது.

இரண்டாவது போட்டியில் ஜப்பானிடம் ஆஸ்திரேலியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. மூன்றாவது போட்டி மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா கடுமையாக போராடி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. ஜப்பான் பிரிட்டனுடனும், ஆஸ்திரேலியா மலேசியாவுடனும் மோதுகின்றன.

         

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*